தெலுங்கு சினிமாவில் தற்போது “கண்ணப்பா” என்று திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் இந்தி மொழியில் வெளியாகும் நிலையில் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இந்த படம் சிவபெருமானின் பக்தரான கண்ணப்பாவின் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு  முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் மோகன் பாபு, கருணாஸ், ரகுபாபு சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஸ்டீபன் தேவஸி இசையமைத்துள்ள நிலையில் வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தை குறித்து தற்போது சமூக வலைதளங்களில் சில மீம்ஸ்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் ரகுபாபு “இந்த படத்தை யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடவுள் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளவார்கள்” என்று கூறினார். மேலும் நடிகர் ரகுபாபு படத்தை விமர்சித்தால் சிவ பெருமானின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்று கூறியது இணையதளத்தில் மிகவும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“>