முன்னணி UPI இயங்கு தளங்களில் ஒன்றாக டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான PhonePe இருக்கிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது UPI கிரெடிட் லைன் சேவைகளை வழங்கியுள்ளது. இதனால் வங்கியில் பணம் இல்லை என்றாலும் இதன் மூலம் பணம் அனுப்ப முடியும். இதற்கு வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து கிரெடிட் லைன் வசதியை பெற்றிருக்க வேண்டும். அதனை வைத்திருக்கும் பயனர்கள் PhonePe-வுடன் இணைக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் கடனை வைத்து வணிகர்களுக்கு பணம் செலுத்த முடியும்.

இதன் மூலம் பயனாளர்கள் மில்லியன் கணக்கான வணிகர்களுக்கு எளிதாக பணம் செலுத்த முடியும். அதோடு குறுகிய கால கடன் வசதியும் பெறலாம். இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் UPI சேவைகளை விரிவு படுத்தியது. அப்போது PhonePe இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதனை இணைக்க பயனர்கள் சுயவரப் பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு வங்கி விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிரெடிட் லைன் வசதியுடன் கூடிய வங்கியின் பெயரை தேர்ந்தெடுத்து இணைக்க வேண்டும். இதனை இணைத்த பிறகு UPI பின்னை அமைக்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும் நீங்கள் கடன் விருப்பத்தை பார்ப்பீர்கள்.