பாலஸ்தீனத்தில் வசிக்கும் ஹமாஸ் அமைப்பினர் தனது அண்டை நாடான இஸ்ரவேலுக்குள் புகுந்து திடீரென போர் தொடுத்தது. இதில் பல பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நூற்றுக்கணக்கானோர் பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்தது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போர் கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் தனது நட்பு நாடுகளின் மூலம் இந்த போரை நடத்தி வருகிறது.

இஸ்ரேலுக்கு பல நாடுகளில் இருந்து ஆயுதங்கள் வரவழைக்கப்படுகிறது. அந்த வகையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கிய முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யும் ஆயுதங்களை தற்போது அந்நாட்டு ஜியோர்ஜியா மெலோனி நிறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, காசா பகுதியில் போர் நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து இத்தாலியிலிருந்து இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயுத தளவாடங்கள் உடனடியாக நிறுத்தப்படுகிறது என்று கூறினார்.