உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீர்சாபூர் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.பி வினோத் பிந்த் பதோஹி தொகுதியில் அவரது அலுவலகத்தில் வைத்து நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இரவு கறி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு இளைஞர் ஒருவர் தனக்கு எந்த கறியும் பரிமாறப்படவில்லை என உணவு பரிமாறும் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு கைகலப்பாக மாறி இரு தரப்பினருக்கிடையே மிகப்பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலவரத்தை நிறுத்தி உள்ளனர். மேலும் இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.