
மும்மொழிக் கொள்கையை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று விஜய்க்கு, தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, தனது படங்களை மூன்று மொழிகளில் வெளியிடும் விஜய், மும்மொழி கொள்கையை எதிர்க்கலாமா?. வியாபாரத்திற்கு மட்டும் முன்மொழிக் கொள்கை.
ஆனால் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா?. தமிழில் மட்டும் தான் எனது படம் ரிலீஸ் ஆகும் என்று அவர் சொல்வாரா?. எனவே மும்மொழி கொள்கை விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.