இன்றைய காலகட்டத்தில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மருத்துவத்துறை, போக்குவரத்து, கல்வி போன்ற பல துறைகளிலும் ரோபோக்கள் பங்காற்றி வருகின்றது. இந்நிலையில் சீனாவில் AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கோள வடிவிலான காவல்துறை ‘ரோபோ’ ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ தெருகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த ரோபோ வழக்கமான ரோபோக்களை போல இல்லை, கண்காணிப்பு வசதிக்காக உருவாக்கப்பட்டது.

குற்றவாளிகளை துரத்தவும், அவர்களை பிடிக்கவும் இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது. நீரிலும், நிலத்திலும் தடையின்றி செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது சுற்றுப்புறங்களை விழிப்புடன் கண்காணித்து வருகிறது. அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் செயல்படும் வகையில் வலிமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ காவல்துறையினருடன் சேர்ந்து ரோந்து பணியில் செல்கின்றது. மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரோபோவில் சென்சார்களும் உள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளை சுலபமாக அடையாளம் கண்டுபிடிக்கவும் முடியும்.

 

 

View this post on Instagram

 

A post shared by Chengdu, China (@chengdu_china)