
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, ஆண்டவனிடம் சென்று கோரிக்கை வைப்பது ஒரு புறம்… ஆண்டவனிடம் சென்று வழிபாடு நடத்துவது என்பது ஒரு புறம்…. ஆண்டவனிடம் சென்று கோரிக்கை மனு வைக்கப் போகிறேன் என்று லெட்டர் பேடை விரித்து வைத்துக்கொண்டு, கூட்டமாக திருக் கோயிலுக்கு கோஷங்களோடு செல்வது இன்னொரு புறம்…
எந்த திருக்கோயிலில் எந்த சட்டத்தில் இப்படி கூட்டமாக லெட்டர் பேடை விரித்து வைத்துக் கொண்டு ஆண்டவனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்போகிறோம் என்று எந்த சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது என்பதை தெரிவு படுத்தப்பட வேண்டும்.
இப்படி கூட்டமாக சென்று நாங்கள் கோரிக்கை வைக்கப் போகிறோம் என்று, கோரிக்கையை சார்ந்த குற்றசாட்டுகளையும், வாசித்துக் கொண்டு செல்வது, எந்த வகையில் ஏற்புடையது. ஆகவே, சட்டம் தன் கடமையை செய்திருக்கின்றது. எந்த கட்சியைச் சார்ந்தவன் என்பது முக்கியமல்ல.
நாம் முதலில் மனிதர்கள், நாம் முதலில் ஆன்மீகவாதிகள், இறைப்பற்று உள்ளவர்கள் என்றால், திருக்கோவிலில் அரசியல் செய்யக்கூடாது. அரசியல் என்பது கோவிலுக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வார்த்தை சொல்லுவார்கள், இறைவன் முன்பு அனைவரும் சமம் என்று…… ஆகவே, திருக்கோவிலை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைபாடு என தெரிவித்தார்.