ராமேசுவரத்தில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த அலி நவாஸ்(27) என்பவர்  போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் ராமேசுவரம் சிவகாமி நகர் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. அங்கு தனது துணி வியாபாரம் செய்ய வந்த அலி நவாஸ், விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் நவாஸை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அலி நவாஸை கைது செய்தனர்.