இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் குஜராத் அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் வரை எடுத்தார். அதன்பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் 19.2 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்த ஆல் அவுட் ஆனது. இதனால் குஜராத் அணி 58 நாட்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டியின் போது ரியான் பராக் நடுவருடன் சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதாவது ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அப்போது கெஜ்ரிலியோ பந்து வீச விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பராக் அவுட் ஆகிவிட்ட நிலையில் நடுவரின் முடிவை எதிர்த்து அவர் வாக்குவாதம் செய்தார். அதாவது பந்து பேட்டிற்கு அருகே வந்தபோது அதே சமயத்தில் பேட் தரையில் பட்டது.

இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில் ஸ்கீனிக்கோமீட்டரில் அதிர்வு காணப்பட்டதால் மூன்றாவது நடுவரும் அவுட் என தீர்ப்பு வழங்கி விட்டார். இதனால் பராக் அதிருப்தியில் நடுவருடன் வாக்குவாதம் செய்து கொண்டே வெளியேறினார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.