
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்னும் செய்ய வேண்டாம்… நான் வெளிப்படையா ஒரு சவால் விடுறேனே .. நான் ஆட்சியில் உட்காந்துட்டேன்… என் மீனவனை தொடுறா பாப்போம். தொட்டுடா பாப்போம். பயப்படுறவனுக்கு தான் தம்பி இது எல்லாம் . ஆளுநர் எதுலையுமே கையெழுத்து போட மாட்றாரு.. ரொம்ப சேட்டை பண்ணுறாரு… ஒரு ரெண்டு, மூணு வருஷம் பொறு வந்துடுறேன்.
முடிஞ்சா இதே ஆளுநரை போடு, எல்லா பாதுகாப்பு வீரர்களும் வீட்டுக்கு வந்துரனும். பூட்டு எவ்ளோ பெருசு டா இருக்கு…. போடுடா பூட்டிட்டு சாவியை என்கிட்ட எடுத்துட்டு வா டா…. மின் தொடர்பை துண்டிடா…. தண்ணீர் தொடர்பை துண்டிடா…. போடுடா இருட்டுல….. உடனே டெல்லிக்கு போன் போடுவாரு… என்னவாம் உன் பிரச்சனை…. எட்டு கோடி மக்களால் நிறுவ பட்ட மக்களின் ஆட்சிக்கு இல்லாத அதிகாரம், ஒரு நியமன உறுப்பினர்….. ஓசி சோறு திங்குற… இந்த பயலுக்கு என்னடா இவ்ளோ அதிகாரம்…. என்ன அதிகாரம் ?
என் நிலத்தின் வாழுகிற…. என் மக்களின் நலன் கருதி… எதிர்கால நல்வாழ்வு கருதி…. நாங்கள் போடுகின்ற சட்டங்கள்…. திட்டங்களுக்கு கையெழுத்து போடலனா..? அந்த புடிங்கி அங்க எதுக்கு உட்கார்ந்து இருக்கான் ? மண்ணின் மக்கள் குடியிருக்க வீடு இல்லாம தெருவுல கிடக்குற…. இவனுக்கு எதுக்கு 150 ஏக்கருல பேலஸ்? ராஜ்பவன் ? ஆட்டம் காட்ட ஆள் இல்லை. எல்லா திருட்டு பயனும் தலையாரிய பாத்த உடனே பயப்படுவான்ல.. ஐயோ… ஐயோ… அப்படின்னு… அவனும் பெரிய திருட்டு பய…. கொடுமைகாரங்கஎன தெரிவித்தார்.