வேலூர் மாவட்ட த்தில் உள்ள ஒடுகத்தூரில் இருந்து தனியார் பேருந்தை ஒருவர் வேலூர் நோக்கி ஓட்டி சென்றார். அவர் செல்போன் பேசியபடி நீண்ட தூரம் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இதனை பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அந்த வீடியோவை பார்த்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பந்தப்பட்ட பேருந்து டிரைவரை அழைத்து விசாரணை நடத்தி சோதனை அறிக்கை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் விதிமீறிய பேருந்து டிரைவரின் லைசென்சை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.