மலைப்பகுதியில் 2 இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது சாலை காப்புக்கோல்களில் சிக்கியிருந்த மாட்டை பார்த்து உதவ சென்றார்கள். அவர்களில் ஒருவர் தனது கையுறைகளை கழட்டி, மாட்டின் பின்னாடியை தூக்கி காப்புக்கோலிலிருந்து மீட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த மனித நேயச் செயல் சமூக வலைதளங்களில் பலரின் மனதை கவர்ந்தது. இந்த வீடியோ, மனிதர்களும், விலங்குகளும் இணைந்திருக்கும் காட்சிகளை வெளிப்படுத்துவதோடு, மனிதனின் உதவியுள்ள மனதை பிரதிபலிக்கிறது.