
தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் நடித்த படங்கள் மூலம் பல பெண்களின் மனதை கவர்ந்தார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கான பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, பட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதுகுறித்து செய்யாறு பாலு கூறியதாவது, அப்பாஸ் முதல் முதலில் மாடலாக அறிமுகமானார். அதன் பின் சினிமா துறையில் ஹீரோவாக நுழைந்தார். இவரது முதல் படம் “காதல் தேசம்”, இதைத்தொடர்ந்து இவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தது. அதிகமான படங்களில் இவர் 2-வது ஹீரோவாகவே நடித்துள்ளார்.
இதையடுத்து இவருக்கு உலகநாயகி ஐஸ்வர்யா ராயுடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழ் சினிமா துறையை பொருத்தவரையில் பிரபலமான ஹீரோக்கள் சினிமா பின்புலத்துடனின் நுழைந்துள்ளனர். ஆனால் அப்பாஸ் அப்படி இல்லை என்று செய்யாறு பாலு கூறினார். அப்பாஸுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இருந்தபோது, அவர் ஆடம்பரமாக வாழ்ந்தார். பட வாய்ப்புகள் குறைய குறைய ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார். இதன் பிறகும் சினிமா துறையில் இருந்தால் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயந்து தன் நண்பன் நியூசிலாந்திற்கு அழைத்ததுடன் தன் குடும்பத்தோடு அங்கு சென்று ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்துள்ளார்.