ஆந்திர மாநிலம் தசரகுடேம் பகுதியில் சித்தையா என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சித்தையா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை ஒன்று புகுந்து விட்டது. அது பயிர்களை மிதித்து நாசப்படுத்தியதால் அதிர்ச்சி அடைந்த சித்தையா உடனடியாக விரட்டுவதற்காக ஓடினார்.

அப்போது யானை கோபத்தில் அவரை துரத்தியது. இதில் அவர் தவறி கீழே விழுந்த நிலையில் அவரை காலால் மிதித்து கொன்றது. இந்த தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சித்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சித்தையாவின் குடும்பத்திற்கு ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அறிவித்துள்ளார்.