
சீன நாட்டைச் சேர்ந்த பெண் வாங். இவருக்கு இளம் வயதில் ஒரு மகள் உள்ளார். வாங்கின் மகள் உதடுகளில் அணியும் அணிகலன் வாங்க ஆசைப்பட்டுள்ளார். இதற்கு தனது தாயின் நகைகளை திருடிச் சென்று விற்று உள்ளார். இதனைத் தொடர்ந்து வாங் தனது வீட்டில் இருந்த ஒரு மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பின்படி 1.2 கோடிரூபாய் அளவிலான வளையல், நெக்லஸ் மற்றும் ரத்தின கற்கள் போன்ற நகைகளை சோதனை செய்யும் போது நகைகள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாங்கின் மகள் லீ நகைகளை திருடிச் சென்று விற்றது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் வாங்கின் மகளான லீடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் தனக்கு உதடு அணிகலன் வாங்க பணம் தேவைப்பட்டதாகவும் இதனால் வீட்டில் இருந்த நகைகள் போலியான நகைகள் என நினைத்து எடுத்துச் சென்று 700 ரூபாய்க்கு விற்று ஒரு ஜோடி உதடு அணிகலன் வாங்கியதாக கூறியுள்ளார். இதன் பின்னர் இவர் விற்பனை செய்த கடைக்கு சென்று நகைகளை மீட்டு காவல்துறையினர் வாங்கிடம் ஒப்படைத்தனர்.