
தற்போதைய காலகட்டத்தில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. சில வீடியோக்களை பார்க்கும்போது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். அந்த வகையில் ஒற்றைக்கால் இல்லாத சிறுவன் ஒருவனுக்கு செயற்கை காலை அவனுடைய விளையாட்டு பொம்மை மூலமாக கொண்டு வந்து மருத்துவர் பொருத்துகிறார்.
அதனை தொடர்ந்து செயற்கை காலுடன் குழந்தை சிறுவன் நடக்கும் காட்சி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை விஜயகுமார் ஐபிஎஸ் என்பவர் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை மில்லியக்கணக்கான பயனர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர். மேலும் இதனை பார்த்து நெட்டிசன்கள் சிறுவனின் புன்னகைக்கு காரணமான மருத்துவருக்கு வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.