பாம்புகள், குறிப்பாக பைதான் மாதிரியான பெரும் பாம்புகள் என்றாலே பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். ஆனால், இன்ஸ்டாகிராமில் மைக் ஹோல்ஸ்டன் என்ற நபர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

அந்த வீடியோவில், அவர் ஒரு குளியல்தொட்டியில் அமர்ந்திருக்கும் நிலையில், அவரைச் சுற்றி ஒரு பெரிய பைதான் பாம்பு சுறுசுறுப்பாக சுழன்றுக்கொண்டிருக்கும் காட்சியை காணலாம். மைக் இதில் எவ்வித அச்சமுமின்றி புன்னகையுடன் காணப்பட, பாம்பும் அமைதியாக இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய சில நாட்களில் 1.8 மில்லியன் பார்வைகளை கடந்து, பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. சிலர் மைக்கின் நிதானமான இயல்பை பாராட்டினர். “அதிர்ச்சியூட்டும் காலங்களில் கூட அமைதியாக இருப்பது மகத்தான விஷயம்,” என ஒருவர் பதிவிட்டிருக்க, “இது துணிச்சலா? இல்ல பைத்தியக்காரத்தனமா?” என மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், சிலர் இது பாதுகாப்பற்ற செயல் என கண்டனம் தெரிவித்தனர். “இப்படி விடியோவை போடுவது நல்லதல்ல, இது போன்ற படங்களைப் பார்த்து மற்றவர்கள் பாம்புகளுடன் விளையாட முயற்சி செய்வார்கள்,” என எச்சரித்துள்ளனர். மாறாக, ஹோல்ஸ்டனை ஆதரிக்கும் சிலர், “அவர் ஒரு வனவிலங்கு நிபுணர், பாம்பின் மனநிலையை நன்கு புரிந்துகொள்கிறார்,” என கூறி அவரது செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.