ஏடிஎம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பான வழி முறையாகும். பொதுமக்கள் அனைவரும் தற்போது ஏடிஎம் மூலம் சேமிப்பு பணத்தை எளிமையாக எடுத்துக் கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் ஏடிஎம் வசதி இருப்பதால் பண பரிவர்த்தனை எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்னும் சில வசதிகள் உள்ளன. அவை பின்வருமாறு,

1. ஏடிஎம் மூலம் காப்பீட்டுத் தொகையையும் பெற முடியும்.
2. பிரதான் மந்திரி ஜந்தன் யோஜனா ரூபே கார்டு வைத்திருப்பவர்கள் ரூபாய் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை காப்பீடு தொகை பெறலாம்.
3. கவரேஜ் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் ரூபாய் 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை பெறலாம்.
4. கிளாசிக் ஏடிஎம் கார்டுக்கு ரூபாய் 1 லட்சம், பிளாட்டினம் ஏடிஎம் கார்டுகளுக்கு ரூபாய் 2 லட்சம், மாஸ்டர் கார்டுகளுக்கு ரூபாய் 50,000 வரை காப்பீட்டு தொகை பெறலாம்.
5. பிளாட்டினம் மாஸ்டர் கார்டுகளுக்கு 5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.
6. விசா கார்டுகளுக்கு 1.5 லட்சம் முதல் ரூபாய் 2 லட்சம் வரை பெறலாம்.
7. இந்த காப்பீட்டுத் தொகையை பெற ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட விபத்து குறித்த ஆதாரங்கள், எஃப்.ஐ.ஆர் காப்பி, மருத்துவர் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்து காப்பீட்டு தொகை பெற்றுக் கொள்ள முடியும்.
8. விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அவரது நாமினி மூலம் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும்.