இந்தியாவில் பிரபல ஒலா நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய நிலையில் அடிக்கடி அந்த ஸ்கூட்டர்கள் மீது புகார்கள் வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றன. ஸ்கூட்டர்கள் பழுதடைந்தால் சர்வீஸ் சென்டர்கள் செல்லும் போது முறையான பதில்கள் கிடைப்பதில்லை என்று வாடிக்கையாளர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு வாடிக்கையாளர் அடிக்கடி ஸ்கூட்டர் பழுதானதால் ஷோரூம் முன்பாக அதனை தீ வைத்து எரித்தார். இதே போலவே ஒரு பெண் ஒருவர் ஓலா ஸ்கூட்டர் வேஸ்ட் என்று பெரிய போர்டை தன் ஸ்கூட்டரில் மாட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது ஓலா நிறுவனம் சர்வீஸ் சென்டர்களில் பவுன்சர்களை நியமித்துள்ளது.

இதனால் கோபமடைந்த சில வாடிக்கையாளர்கள் காமெடியன் குணால் கம்ராவை X தளத்தில் டேக் செய்து தங்கள் புகாரை தெரியப்படுத்தி வருகின்றனர் .