
வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி தெருவில் கருணாமூர்த்தி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பித்தப்பை பிரச்சனை காரணமாக கடந்த 3 மாதங்களாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15-ஆம் தேதி கருணாமூர்த்தி கத்திரிக்கோலை எடுத்து வயிற்றில் குத்தி படுகாயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருணாமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.