
நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் பழைய ஓய்வு புதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைப்பதற்காக அறிவிக்கும் முன் அந்த மாநில அரசு தேவையான பட்ஜெட் ஒதுக்கீடுகளை செய்துள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆலோசனைக்கு பின் மாநில அமைச்சரவையின் முதல் கூட்டத்தின் போது இந்த திட்டத்தை மீட்டெடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து படிப்படியாக நிறைவேற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். முந்தைய பாஜக நிர்வாகம் ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக உறுதியளித்தும் ஊழியர்களின் நிலவைத் தொகையை செலுத்த தவறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசி உள்ளார்.
நாட்டில் ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வு புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாநில அரசுகள் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றி மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்கள் இனிவரும் காலங்களில் நிதி மேலாண்மை ஆபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் துணிச்சலான முடிவை எடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு மௌனம் காத்து வருகிறது. தேர்தல் வாக்குறுதி கொடுத்தும் அதனை நிறைவேற்ற தயங்குவது ஏன் என ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.