
உலகத்தில் முகத்தில் அதிக முடி கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை இந்தியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பிடித்துள்ளார். அந்த வாலிபரின் பெயர் லலித் படித்தார். இவருக்கு 18 வயது ஆகும் நிலையில் ஒரு சதுர சென்டி மீட்டருக்கு 21.72 முடியுடன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த வாலிபர் வேண்டுமென்றே முகத்தில் முடி வளர்க்கவில்லை. ஒரு அரிய வகை மரபணு தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது ஹைபர் டெரிகோஸிஸ் என்ற நோயினால் வாலிபர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால்தான் தேவைக்கு அதிகமாக முகத்தில் முடி இருக்கிறது.
இது பற்றி அந்த வாலிபர் கூறும் போது பள்ளியில் படிக்கும் போது என்னை பார்த்து பலரும் பயந்தார்கள். பின்னர் என்னுடைய சக தோழர்கள் முகத்தில் முடி இல்லாமல் என்னை பார்த்தார்கள். அப்போது நானும் அவர்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தான் என்பதை புரிந்து கொண்டனர். இருப்பினும் இந்த முடியால் என்னை சிலர் கேலி செய்துள்ளனர். அதே சமயத்தில் சிலர் என்னை பார்த்து பரிதாபப்படுவார்கள். மேலும் இது என்னை பார்க்கும் ஒவ்வொருவரும் என்னை ஒருவிதமாக நினைப்பார்கள் ஆனால் தற்போது அதெல்லாம் பழகிவிட்டது என்றார்.