தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு பணிகள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி வயது வாரியாக தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 67,33,560 பேர்தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.