பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் ஷியா முகைதீன்‌ (91). இவர் லாரன்ஸ் ஆப் அரபிக் என்ற முதல் ஹாலிவுட் படத்தில் நடித்தவர். இந்த படத்தில் நடித்ததால் ஹாலிவுட் படங்களில் நடித்த முதல் பாகிஸ்தான் நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த படத்திற்குப் பிறகு பல ஹாலிவுட் படங்களில் ஷியா முகைதீன் பணியாற்றியுள்ள நிலையில், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்துள்ளார்.

இவர் இங்கிலாந்து திரைத்துறையில் சீரியல்களில் நடித்தும் பிரபலமானார். பாகிஸ்தான் நாட்டு படங்களிலும் நடித்துள்ள ஷியா முகைதீன் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை திடீரென காலமானார். வயது மூப்பின் காரணமாக ஷியா முகைதீன் காலமாகியுள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.