ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதற்கு இந்திய ராணுவம் அவ்வபோது தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் ராணுவ அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் அவர்கள் கூறியதாவது, உலக நாடுகள் அனைத்து பகுதிகளுக்கும் பயங்கரவாதிகளை அனுப்பும் மிகப்பெரிய மையங்களாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை நிலைநிறுத்த பாகிஸ்தான் முயன்று வருகிறது.

இருப்பினும் இந்திய பாதுகாப்பு படையினரால் ராஜோரி, பூஜ், தோடா, கிஷ்த்வார், கதுவா மற்றும் ரியாசி ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கையை தொடர்ந்து கட்டுக்குள் வைத்து வருகிறது. மேற்கண்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் இதுவரை 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 60% பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. எனக் கூறியுள்ளனர்.