இன்றைய காலகட்டத்தில் அவ்வபோது சமூக வலைத்தளத்தில் ஏதேனும் ஒரு சம்பவம் காணொளியாக வெளியாகி பார்ப்போரை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும் அவ்வகையில் தற்போது ஒரு காணொளி வெளியாகி பார்ப்போரை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

அந்த காணொளியில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவர் மருத்துவமனைக்கு காரில் அழைத்து செல்கிறார். வலி தாங்காமல் துடிக்கும் அந்த கர்ப்பிணிப் பெண் ஒரு கட்டத்தில் குழந்தை வெளியில் வருவதை உணர்கிறார். உடனே தன் அணிந்திருந்த பேண்டை கழட்டி வெளியில் வந்த குழந்தையை கையில் எடுக்கிறார்.

இவ்வராக பயணத்தின் போது குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளது . பின்னர் மருத்துவமனைக்கு சென்றதும் செவிலியர்கள் தாய் மற்றும் குழந்தையை மருத்துவ உதவிக்கு அழைத்துச் சென்றனர். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் பலரும் ஆச்சரியமடைந்ததோடு மகிழ்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.