
உலகெங்கிலும் உள்ள மலையாள மக்கள் அனைவரும் மிகவும் விமர்சையாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று ஓணம் பண்டிகை என்பதால் கேரளா மட்டுமாற்றி பல மாநிலங்களில் வசிக்கும் மலையாள மக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் என தமிழிலும், மலையாளத்திலும் பதிவிட்டுள்ளார்.