சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் திருமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு திருமணி அடிக்கடி தனது மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியை திருமணி அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதனையடுத்து திருமணி தனது மனைவியை தாக்கி தடுக்க முயன்ற மகனையும் கட்டையால் அடித்தார். இதுகுறித்து திருமணியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமணியை கைது செய்தனர்