
சென்னை மாவட்டத்தில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் சிவாஜி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிவாஜி 397 கிராம் தங்க நகைகளை தம்பு செட்டி தெருவில் இருக்கும் தனியார் வங்கியில் அடகு வைத்து 18 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடந்த 2 வருடமாக நகைக்கு வட்டி கட்டாமல், நகையையும் மீட்காமல் இருந்துள்ளார். இதனால் வங்கி அதிகாரிகள் நகையை ஏலம் விடுவதற்காக சோதனை செய்தனர்.
அப்போது சிவாஜி அடகு வைத்தது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஒரு விடுதியில் பதுங்கி இருந்த சிவாஜியை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.