
அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை… மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… பூவிலி கண்ணன்… நம் அண்ணன் நாளைய முதல்வர், கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், மக்களின் முதல்வர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால தமிழகத்தினுடைய முதலமைச்சர் நிரந்தர முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார்ருக்காக…
அண்ணன் அவர்களுக்கு ஒரு ஓ போடுங்க. அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு ஓ போடுங்க.. மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் சொன்ன தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மாணிக்க தலைவி நம் தங்கத்தாய் ஒன்றை கோடி தொண்டர்களை தன்னுடைய உயிராக..
உறவாக நினைத்து நம் தமிழ் மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட நம் இதய தெய்வம் அம்மா… இவருடைய ஒட்டுமொத்த உருவமாக இன்றைக்கு கழகத்திற்கு கிடைத்திருக்கிறது நம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார். மூணே மூணு நிமிடம் சொல்லி இருக்காங்க. நான் ரெண்டே ரெண்டு நிமிடத்தில் சொல்லி முடிக்கின்றேன்.
இந்த இடம் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு. காலையில மாவட்டத்தின் சார்பிலே வைரவேல் கொடுத்தோம். அந்த வேல் எதற்கு கொடுத்தேன் தெரியுமா ? பொம்மை முதலமைச்சர்… கொடுங்கோல் திமுக ஆட்சி… சூரசம்காரம் பண்ண போகின்ற நம்முடைய முருகனின் அவதாரம் எடுத்திருக்கிற பழனிச்சாமி. ஒரு சாமி… இரு சாமி இல்ல… ஆறுச்சாமி அடக்கத்தில் மறு வடிவமாக இருக்கின்ற நம்முடைய அண்ணன் என தெரிவித்தார்.