உலகம் முழுவதும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் பயனாளர்களின் காலாவதியான கிப்ட் காடுகள் மூலமாக மோசடி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் தனது வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, அமேசான் கிப்ட் கார்டு குறித்து பயனாளர்கள் கொடுத்த புகார்கள் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அமேசான் பயனாளர்களின் காலாவதியான கிப்ட் கார்டு மூலம் கஷ்டப்பட்டு அவர்கள் சம்பாதித்த பணம் முடக்கப்படுகிறது. சமீபத்தில் எனது அலுவலகத்தில் கூட இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 295 கோடிக்கு அதிகமான இந்தியர்கள் ஆன்லைனில் இகாமர்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட காலம் பயன்படுத்தாமல் இருக்கும் கணக்கு ‘டார்மெண்ட்’ என்ற பெயரில் செயல் இழந்து விடுகிறது.

இதனால் வாடிக்கையாளர்களின் பணம் திரும்ப எடுக்க முடியாத அளவுக்கு முடுக்கப்பட்டு விடுகிறது. இதற்கு தீர்வு காண முடியவில்லை. இந்தியாவில் அமேசான் மூலம் மட்டுமே 100 கோடிக்கும் அதிகமான கிப்ட் காடுகள் வழங்கப்பட்டுள்ளது. கட்டணம் குறித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள வழிகாட்டுதலின்படி, குறைந்தபட்சம் ஒரு வருடம் செல்லுபடியாக வேண்டும், முன்னறிவிப்புக்கு பிறகு, அந்த கணக்குகள் முடக்கப்பட வேண்டும். மீதமுள்ள தொகையை பயனர்களின் வங்கி கணத்திற்கு மாற்ற வேண்டும். நுகர்வோரை பாதுகாக்க வெளிப்பட தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்ய அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.