சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலம் பண மோசடி அதிகமாக நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை பறி கொடுத்துள்ளார். இது தொடர்பாக வங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, வங்கியில் இருந்து போன் செய்து யாரும் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை கேட்பதில்லை. அதே நேரத்தில் வங்கி தொடர்பான தொலைபேசி அழைப்புகள் வந்தால் 1860 என்று தொடங்கும். அதுமட்டுமல்லது அதில் யார் பேசினாலும் வங்கி தொடர்பான விவரங்களை கேட்க மாட்டார்கள்.

ஆகவே யாரேனும் போன் செய்து வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை கேட்டாலும் அவர்களிடம் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 1930 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.