
பழைய வாகனங்கள் நாம் வாங்கும்போது வாகன உரிமையை நம் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்கென ஆர்டிஓ இடைத்தரகர்களை நாடவேண்டிய சூழல் இருந்தது. எனினும் தற்போது ஆன்லைன் வாயிலாக வாகன உரிமையாளர் பெயரை (ஆர்.சி.புக்) ஈஸியாக மாற்றிக்கொள்ளலாம். இதுகுறித்த வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அதன்படி முதலில் Parivahan எனும் இணையதளத்துக்கு சென்று நம் அக்கவுண்ட்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பின் Online Services எனும் விருப்பத்தை கிளிக் செய்து, Vehicle Related Servicesஐ தேர்வு செய்து நன் மாநிலத்தை தேர்வு செய்யவும்.
எஞ்சின் நம்பர், சேஸ் நம்பர் மற்றும் நம் வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட வாகனம் குறித்த விபரங்களை பதிவிடவும். இதையடுத்து வரும் அப்ளிகேஷன் என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். அதனை தொடர்ந்து வரும் பட்டியலில் நமக்கான விண்ணப்பம் எது என்பதை தேர்வு செய்யவேண்டும். அடுத்ததாக கட்டணம் குறித்த விபரங்கள் வரும். கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்தவும். பிறகு வாகனம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். உரிமையாளர் பெயர் மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் Form 28, Form 29, Form 30, Form 31, Form 35, வாகனத்தின் பதிவுச்சான்று (RC Book), காப்பீட்டுச் சான்று (Insurance policy), Pollution Certificate, முகவரிக்கான ஆவணம் ஆகியவை ஆகும்.
மேலும் ஆதாரோடு இணைக்கப்பட்ட செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களையும் பதிவேற்றம் செய்யவும். அதன்பின் வரக்கூடிய ஓடிபி எண்ணை பதிவிட்ட பிறகு உங்களது வேலை முடிந்துவிடும். ஒரு சில தினங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட புது வாகன பதிவுச்சான்று உங்களுக்கு கிடைத்துவிடும். அதாவது தபால் மூலம் வந்து சேரும் (அ) ஆர்டிஓ அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு வரும். மாநிலத்துக்கு மாநிலம் நடைமுறையில் மாற்றம் இருக்கும். இச்செயல்பாடுகளின்போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று நாம் பதிவேற்றம் செய்யும் அனைத்தின் நகல்களைம் Copy வைத்துக்கொள்வது.