
திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், நம்முடைய முதன்மை செயலாளர் நேரு அவர்களும் என்னோடு வந்தார்கள். கோபாலை பற்றி அவரிடத்திலே காரில் சொல்லிக் கொண்டிருந்தேன்… நான் சொன்னதை அப்படியே இங்கே பேசி விட்டார். நான் என்ன பேசணும்னு நினைத்தேனோ, அதை ”முந்திரிக்கொட்டை” என்று சொல்லுவார்கள் அல்லவா…. நேரு எப்பொழுதுமே Speed. எல்லாரும் சொல்வதற்கு முன்னாடி அவர் சொல்லிவிடனும்…. அப்புறமா நான் தெரிச்சிக்கிட்டேன்…
ஏன்டா இவங்க கிட்ட சொல்லிட்டேன் என பீல் பண்ணுனேன். அந்த அளவிற்கு ஆர்வத்தோடு அவரும் அதை எடுத்துச் சொன்னார். தலைவருக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பு முதல் முதலில் என்னிடம் தான் கோபால் அவர்கள் அறிமுகமானார்கள். 1970 – 1971 ஆம் ஆண்டில் மதுரையில் இளைஞர் அணி துவக்கப்பட்ட நேரத்தில், அப்பொழுது என்னோடு இருந்து…
எனக்கு துணை நின்றவர் நம்முடைய திருமங்கலம் கோபால் அவர்கள். எம்ஜிஆர் அவர்கள் நம்மை கட்சியை விட்டுப் பிரிந்து…. ஒரு இடைத்தேர்தலை சந்தித்தோம்… ”திண்டுக்கல் தீர்ப்பு” என இடைத்தேர்தல் சந்திச்சோம். திண்டுக்கல் தீர்ப்பு என்கின்ற பிரச்சார நாடகத்தில் நான் நடிச்சேன். அப்போ அந்த நாடகத்தை திருமங்கலத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுல சில கலவரங்கள் ஏற்பட்டு விடுகின்றது. அதுக்குள்ளே உள்ள பிரச்சனைக்கு நான் போகல, அதை அரசியல் ஆக்க விரும்பவில்லை. அந்த கலவரம் ஏற்பட்ட நேரத்தில் எங்கிருந்து எப்படி வந்தார் ? யாருன்னுனே எனக்கு தெரியாது…
கோபாலை முன் முதலில் பார்த்ததே கிடையாது… திருமங்கலத்தில் கோபால் அவர்கள் ஓடோடி மேடைக்கு வந்து என்னை பாதுகாத்து, அழைத்துக் கொண்டு காரில் ஏற்று என்னை கொண்டு போய்… தங்கி இருந்த இடத்தில் பாதுகாப்பாக விட்டார். அப்பொழுது தான் எனக்கு முதல் முதலில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் என்னுடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு. அதன் பிறகு அடிக்கடி சென்னை வருவார் என தெரிவித்தார்.