செய்தியாளர்களிடம் பேசிய அமர் பிரசாத் ரெட்டி, பிரஸ்,  மீடியா எல்லாம் புழல்ல இருந்து இருப்பீங்க…..  என்ன இறங்கவிடாமல் போலீஸ்….. என்னை  நீங்க வண்டியில் இருந்து இறங்கவே கூடாதுன்னு சொல்லி ONE WAY வழியாக உள்ளே  கொண்டு வந்தாங்க…  நான் வர மாட்டேன்னு சொன்னேன். ONE WAY வழியாக நான் வரமாட்டேன் என சொன்னேன்.. திரும்ப  அதுக்கு ஒரு கேஸ் போடுவாங்க….

அமர் பிரசாத் ரெட்டி ONE WAYல வந்தாரு… அப்படின்னு சொல்லி,  அதுக்கு ஒரு கேஸ் போடுவாங்க.  நான் வர மாட்டேன்னு சொன்னேன். இல்லை உங்களுக்கு Patrol ( ரோந்து ) வெச்சி இருக்குது அப்படின்னு சொல்லி… DC  கமலாலயம்வரைக்கும் பின்னாடியே வந்தாரு. இதுல என்ன புரிய வேண்டிய விஷயம் அப்படின்னா….

தமிழகத்தில் திமுக அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி இன்னைக்கு பிஜேபி தான். தெளிவா புரிய வைக்கிறது. அதே மாதிரி என்னோட அஞ்சு பேர் அரெஸ்ட் ஆகி  இருந்தாங்க…  உள்ளே நார்மலா  ஃபர்ஸ்ட் டைம் அரெஸ்ட் ஆகுறாங்க அப்படின்னா…  உங்களுக்கு ( பிரஸ்ஸுக்கு) புரியறதுக்காக சொல்றேன்….    நியூ பிளாக் அப்படின்னு சொல்றாங்க….

அந்த நியூ பிளாக் என்பது பர்ஸ்ட் டைம் கைதின்னு வராங்க இல்லையா?  ஃபர்ஸ்ட் டைம் ரிமாண்ட்டில்  வருகின்றவர்களை அங்கே வைப்பாங்க…. அங்க  கொஞ்சம் பேசிக் ஃபெசிலிட்டிஸ் இருக்கும்… ஆனால் என்னை  பாத்தீங்கன்னா…. டார்ச்சர் பண்றாங்க…..  பிளாக் 3 செல்  2. இந்த பிளாக்  3 செல் 2 எல்லாமே கொலை பண்ணி உள்ளே வந்தவர்கள்…  போதை வழக்கில் வந்தவர்கள், 80 சதவீதம் மிசா கைதிகள்,  கஞ்சா இந்த மாதிரி இதுல மாட்டுனவங்க இடத்துல என்னை போட்டு இருந்தார்கள் என தெரிவித்தார்.