
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பல போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பீகார் மாநிலம் சீதாமஹியில் ஐஏஎஸ் அதிகாரி நூருல் ஹுதா தன்பாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோனால், டெல்லி ஆகிய ரயில் பிரிவுகளில் பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு இரண்டு முறை குடியரசு தலைவரின் விசிஷ்ட சேவா விருது வழங்கப்பட்டது.
மேலும் காவல்துறை தலைவரின் டி ஜி சக்ரா விருதையும் இருமுறை பெற்றுள்ளார். இவர் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 300 மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஷுல் இன்சான் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார்.