ஜப்பானின் ஹியோகோ மாகாணத்தில், தனது மனைவிக்கு தினமும் சுமார் 100 முறை வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைத்து தொந்தரவு செய்த கணவருக்கு போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், ஒவ்வொரு முறையும் பல தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அந்த பெண் பல முறை அப்படி அழைக்கப்பட்டு, சித்திரவதை  அனுபவித்தார். இதைப் பற்றி கணவரிடம் கூறும்போது அவர் அலட்சியம் செய்ததால் விரக்தி அடைந்துள்ளார்.

பெண், கணவரின் செயல்களில் சந்தேகம் எழுந்தபோது, அவருடன் ஷாப்பிங் செய்யும் போது, சோதனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பின், போலீசார் தம்பதியரின் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்து, கணவரே இந்த தொந்தரவை உருவாக்கியதாக கண்டுபிடித்தனர். விசாரணை செய்யும் போது, தம்பதியருக்கிடையேயான எந்த பிரச்சனையும் இல்லையென்றும், கணவர் மனைவியை நேசிக்கிறார் என தெரிவித்தார்.

ஜப்பானில், தொலைபேசி அழைப்புகள் மூலம் மன உளைச்சலை உருவாக்குவது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கான தண்டனையாக, ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 1 மில்லியன் யென் (அமெரிக்க டாலர் 7,000) வரை அபராதம் விதிக்கப்படலாம்.