
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே போகிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பத்தின் காரணமாக நாடு வளர்ச்சியை நோக்கி தான் முன்னேறி கொண்டு இருக்கிறது. அதே சமயம் மோசடிகளும் ஒரு பக்கம் அரங்கேறி வருகிறது. அதாவது போலியான பரிசுகள் கொடுப்பது, ஏடிஎம் அட்டை லாக் ஆகி இருப்பதாக கூறியும் பல காலமாக மோசடிகள் நடந்து வருகிறது .சில மோசடி ஸ்பம்கள் பொதுமக்கள் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியும் மோசடி செய்து வருகிறார்கள்.
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் போலி மோசடிகளை தடுப்பதற்கு அவற்றை அடையாளம் காண இந்திய தொலைதொடப்புத்துறை ஆணையமானது(TRAI) புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இருப்பினும் ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்று புகார் இருக்கிறது. இந்த விதிகளை செயல்படுத்துவதற்கு இந்த வருடம் டிசம்பர் 1 தான் கடைசி தேதி என்று அறிவித்துள்ளது.