ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பஹல்காம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பெண்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தவறான கருத்துக்களை பரப்புவதாக 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் அசாம், திரிபுரா, மேகாலயா மாநிலங்களை சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அசாம் முதலமைச்சர் பேசிய போது, “தேவைப்பட்டால் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், அனைத்து சமூக ஊடகப் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றும், நாட்டு நலனுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தற்போது இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்த திரிபுராவை சேர்ந்த 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு முகநூலில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என பதிவிட்ட பத்திரிகையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அசாமில் வசித்து வரும் அமினுள் இஸ்லாம் என்பவர் இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏ ஆவார்.

இவர் 2019 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் மற்றும் தற்போது நடந்த பஹல்காம் தாக்குதல் போன்றவை இந்திய அரசின் சதி வேலை என்று கூறிய நிலையில் தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில 4 நாள் சிறை தண்டனைக்கு பின் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.