டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார். முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிக்கி, ஜாமின் பெற்ற பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக அதிஷி டெல்லி அரசின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

பதவியேற்ற பிறகு, அதிஷி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து காணப்படுகிறார். படத்தில் அருகில் ஒரு காலி நாற்காலியும் இடம் பெற்றுள்ளது.

அந்த பதிவில் அதிஷி, தனது சகோதரர் ராமர் வனவாசம் சென்றபோது பரதர் எந்த வலியுடன் அயோத்தியை ஆட்சி செய்தாரோ, அதே வலியுடன் நான் டெல்லி அரசை 4 மாதங்கள் ஆட்சி செய்வேன் என உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.