
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகையின் வீட்டில் முன்னர் பணிபுரிந்த சுபாஷ் என்பவர், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், நடிகை பார்வதி நாயர், பட தயாரிப்பாளர் ராஜேஷ் உள்பட 7 பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 341 (தவறான கைது), 323 (காயம் ஏற்படுத்துதல்), 506 (கொலை மிரட்டல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுபாஷ் அளித்துள்ள புகாரில், தான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த போது தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும், தன்னை திருடன் என்று பொய் குற்றம் சாட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது