கேரளாவில் பொன்னானி பகுதியில் நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் வசித்து வருகிறார். ‘விக்ருதி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் “கனகம் காமினி கலகம்”, “பீமண்டே வாழி”, “ஜன கன மன”, “சோல மண்டே தேனீச்சல்”, “வெள்ளை ஆல்டோ”, “சவுதி வெள்ளக்கா”, “பத்மினி”, “சூர்யவக்யம்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் போதைப்பொருள் உட்கொள்ளும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்த அவர் கூறியதாவது, போதைப் பொருள் உட்கொள்ளும் நடிகர்களுடன் நான் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் கூறியிருந்தேன். இதற்கு சிலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். அப்போது என்னுடன் சேர்ந்து நடித்த முன்னணி நடிகர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நேரடியாகப் பார்த்தேன். அந்த நடிகர் என்னிடமும், மற்றொரு நடிகை இடமும் அத்துமீறினார். இதனால் அந்த படத்தில் இருந்து விலக நினைத்தேன்.

ஆனால் அப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் என்னிடம் மன்னிப்பு கேட்டதாலும், நான் நடிக்காவிட்டால் அந்த படம் வெளியாகாது என்பதாலும் வேறு வழி என்று அடித்தேன். தனிப்பட்ட முறையில் அவர் என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் படப்பிடிப்பு தளத்திலும் பொது இடத்திலும் போதைப் பொருள் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால்தான் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக தெரிவித்தார்.