தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பெண் காவலர்களை கௌரவிக்கும் வகையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று “பெண் காவலர்கள் பொன்விழா ஆண்டு” நிகழ்ச்சியானது நடந்தது. இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை, உயரதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் கலந்துகொண்டனர். காவல் பணியோடு சேர்த்து குடும்பப் பணிகளையும் செய்தாக வேண்டிய நெருக்கடி பெண் காவலர்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் எனில், பெண் காவலர்களுக்கு 2 சல்யூட். அதனால் தான் எல்லா நிலையிலும் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு முழு மரியாதை தரவேண்டும் என்று நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.