அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு எதிரொலியால் எல்ஐசி ஒரே மாதத்தில் 23 ஆயிரம் கோடியை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு எதிரொலியால் எல்ஐசி ஒரே மாதத்தில் 23 ஆயிரம் கோடியை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் எல்ஐசி 30 ஆயிரத்து 127 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருந்தது. கடந்த டிசம்பரில் லாபத்துடன் சேர்த்து எல்ஐசி வசம் இருந்த அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு ரூபாய் 80 ஆயிரம் கோடிக்கு மேல் இருந்தது.

ஜனவரி 24-ல் ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுகள் அம்பலமானதை அடுத்து பங்குகள் சரிவடைய தொடங்கியது. எல்ஐசி நிறுவனம் வசம் இருந்த அதானி குழும நிறுவன பங்குகளின் விலையும் சரிந்ததால் லாபமும் கரைய தொடங்கியது. டிசம்பரில் 50 ஆயிரம் கோடியாக இருந்த லாபம் ஜனவரி 30 ஆம் தேதி 26,000 கோடியாக குறைந்துள்ளது. ஜனவரியிலேயே தன்வசம் இருந்த அதானி நிறுவனங்களின் பங்குகளை  விற்றிருந்தால் 26 ஆயிரம் கோடியாவது மிஞ்சி இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

எல்ஐசி தன் வசம் இருந்த அதானி நிறுவன பங்குகளை விற்காததால் லாபம் முழுவதும் ஒரு மாதத்திலேயே கரைந்து விட்டது. ஜனவரி 30 ஆம் தேதியிலிருந்து இன்று வரை படிப்படியாக எல்ஐசி தனது லாபத்தில் 22,876 கோடி ரூபாயை இழந்துவிட்டது. எல்ஐசி 30,127 கோடிக்கு வாங்கிய அதானி குழும நிறுவனங்களின் மதிப்பு வெறும் 30 ஆயிரம் கோடிரூபாய் உயர்வுடன் 33 ஆயிரத்து 686 ஆக உள்ளது.