ஐநா நடத்திய ஆய்வில் உலகளவில் வசிக்கும் 630 கோடி மக்களில், 110 கோடி மக்கள் வறுமையில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 23.40 கோடி மக்களும், பாகிஸ்தானில் 9.30 கோடி மக்களும், எத்தியோப்பியாவில் 8.60 கோடியும், நைஜீரியாவில் 7.40 கோடி மக்களும், காங்கோ நாட்டில் 6.60 கோடி மக்களும் வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர்.

சமீப காலமாக இருநாடுகளுக்கு இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். இன்னும் பலர் உயிருக்கு பயந்து மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் அவர்களது வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.