
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அறச்சலூர் கிழக்கு தலவு மலை பகுதியில் இருக்கும் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை கடித்து இழுத்துச் சென்றது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விலங்கின் கால் தடயத்தை பதிவு செய்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அது சிறுத்தை புலியாக இருக்கலாம் என அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வளர்த்து வந்த ஆட்டையும் மர்ம விலங்கு கடித்து இழுத்து சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது மர்ம விலங்கின் கால் தடத்தை பதிவு செய்துள்ளோம். அது என்ன விலங்கு என்பது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த விலங்கை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்