திருச்சியில் உள்ள ஜி கார்னர் பகுதியில் ஓபிஎஸ் அணியினர் வருகின்ற 24-ஆம் தேதி மாநாடு நடத்த இருக்கிறார்கள். இந்த மாநாட்டை நடத்துவதற்கு தற்போது காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து நாளை மாலை பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு ஓ. பன்னீர் செல்வம் பல முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.