புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் சிலர் மனு கொடுப்பதற்காக சென்றனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நிதி நிறுவனம் நடத்தி வந்த 2 பேர் பலரிடம் பணம் வாங்கி ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்தனர். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும், மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு வட்டி தொகை தருவோம் என கூறினர்.
மேலும் தவணை காலம் முடிந்ததும் முதிர்வு தொகை வழங்கப்படும் நிதி நிறுவனத்தினர் லட்சக்கணக்கான பணத்தை வாங்கியுள்ளனர். முதல் மூன்று மாதங்கள் வட்டி தந்தனர். அதன்பிறகு வட்டி தரவில்லை. முதிர்வுக்கான தொகையையும் திரும்ப கொடுக்கவில்லை. எனவே நிதி நிறுவனம் நடத்தி வந்த இரண்டு பேரும் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.