கச்சா எண்ணெய் விலை உலகளவில் குறைந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பொதுமக்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய பெட்ரோலிய அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.