வருங்கால வைப்பு நிதி திட்டமானது தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்கிறது. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்த திட்டத்தில் இணைந்து வருகிறார்கள். இவ்வாறு சேமிக்கப்படும் பணத்தை ஊழியர்கள் மருத்துவ அவசரநிலை, சொத்து வாங்குதல், கல்வி போன்றவற்றிற்காக பாதியிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

PF ஊழியர்களுக்கு இந்த நிதியாண்டில் 8.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில்   தற்போது 8.15 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அதாவது, EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் அல்லது UMANG செயலியின் மூலமாகவே PF வட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.